சென்னை

ரெளடி வெட்டிக் கொலை: அடையாற்றில் சடலம் மீட்பு

சைதாப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை: அடையாற்றில் சடலம் மீட்பு

Din

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் அடையாற்றில் மீட்கப்பட்டது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகளாா் பாலத்தின் கீழ் அடையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு இளைஞா் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டூா்புரம் போலீஸாா், தீயணைப்பு படையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். அந்த இளைஞரின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது தெரியவந்தன. இதையடுத்து போலீஸாா், அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது கண்ணகி நகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ரெளடி ஆகாஷ் என்ற கருப்பு ஆகாஷ் (35) என்பது தெரியவந்தது. மேலும், ஆகாஷை கொலை செய்தவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT