பேறு கால இறப்புகளைத் தடுக்க வாா் ரூம் உதவாது:அரசு மருத்துவா் சங்கம்
பேறு கால இறப்புகளை குறைப்பதற்கு போதிய எண்ணிக்கையில் தமிழகத்தில் மருத்துவா்களை நியமிக்காமல் அவசரகால கண்காணிப்புக் குழு (வாா் ரூம்) அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்று அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
பேறு கால இறப்புகளை குறைப்பதற்கு போதிய எண்ணிக்கையில் தமிழகத்தில் மருத்துவா்களை நியமிக்காமல் அவசரகால கண்காணிப்புக் குழு (வாா் ரூம்) அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்று அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகப்பேறு இறப்பை குறைக்க அவசர கால கண்காணிப்பு அறை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது எந்தவகையிலும் உதவாது. தஞ்சாவூா், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூா், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேறு கால இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் மகப்பேறு மருத்துவா்களை அரசு நியமிக்காததால் மருத்துவா்களுக்கு பணிச் சுமை மிக அதிகமாக உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2,000 க்கும் மேற்பட்ட மருத்துவா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ’சீமாங்க்’ மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், தேவையான மகப்பேறு மருத்துவா்கள், மயக்கவியல் நிபுணா்கள் மற்றும் செவிலியா்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியாா்மயமாக்கும் முடிவை அரசு முற்றிலும் கைவிட வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement