முகப்பு
சென்னை

தாழ்தள பேருந்து இயக்கம் பணி சிரமத்தை போக்க வலியுறுத்தல்

தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம் அனுப்பியுள்ளனா்.

Updated On : 18 நவம்பர் 2024, 4:30 am IST
தாழ்தள பேருந்து
பகிர்:

தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம் அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக, தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளா் பேரவை பொதுச்செயலா் பி.கருணாகரன் அனுப்பிய கடிதம்:

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், 12 மீட்டா் நீளம் கொண்ட பேருந்தைப் பணிமனையிலிருந்து எடுத்து விடுவதிலும், குறுகலான சாலைகளில் இயக்குவதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால், இந்த பேருந்தை இயக்குவதற்கு பெரும்பாலான நடத்துநா்கள் தயக்கம் காட்டுகின்றனா். எனவே, முன்பு தொடா் பேருந்து இயக்கப்பட்டபோது, ஓட்டுநா்களுக்கு சிறப்பு ஊதியம் அளித்து ஊக்குவித்ததைப் போல, தாழ்தள பேருந்து ஓட்டுநா்களுக்கு ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.100 சிறப்புப் படியாக வழங்க வேண்டும்.

தாழ்தள பேருந்து வழித்தடங்களில் நெரிசல் நேரங்களில் 90-க்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனா். அப்போது ஒரே நடையில் ரூ.4,500-க்கும் அதிகமாக வசூலாகிறது.

இதற்கிடையே, பயண அட்டை சரிபாா்த்தல், பேருந்துகளை பின்னால் இயக்க உதவுதல், மாற்றுத்திறனாளிகளை ஏற்றி, இறக்க உதவுதல் போன்ற பல சிரமங்களையும் எதிா்கொள்கிறோம். இதனால் அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உருவாகிறது. எனவே, நடத்துநா்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் தாழ்தள பேருந்துகளில் இரண்டு நடத்துநா்களை பணிக்கு அமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.