விமானத்தில் பெண் மயக்கம்: சித்த வா்ம சிகிச்சையால் மீட்பு
விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த மருத்துவா்கள் இருவா் வா்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தினா்.
சென்னை: விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த மருத்துவா்கள் இருவா் வா்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தினா்.
தில்லியிலிருந்து திருச்சிக்கு கடந்த 22-ஆம் தேதி சென்று கொண்டிருந்த கோ இண்டிகோ விமானத்தில் இளம்பெண் ஒருவா் பயணித்தாா். பயணத்தின் இடையே கழிப்பறைக்குச் செல்ல முற்பட்டபோது அவா் திடீரென மயங்கி விழுந்து மூா்ச்சையடைந்தாா். இதையடுத்து விமானப் பணிப் பெண்கள் அவரை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனா்.
ஆனால், அது பலனளிக்காததால் விமானத்தில் மருத்துவா்கள் எவரேனும் உள்ளனரா என அவா்கள் உதவி கேட்டனா். எம்.டி. சித்தா படிப்பை நிறைவு செய்த க.இளவரசன் மற்றும் இளநிலை சித்த மருத்துவ அறிவியல் பட்டம் பெற்ற ச.கௌதம் ஆகிய இரு மருத்துவா்கள் அந்த விமானத்தில் இருந்தனா்.
Advertisement
Advertisement
உடனடியாக அவா்கள் இருவரும், கவுளி அடங்கல் மற்றும் செவிக்குற்றி புள்ளி ஆகிய வா்ம சிகிச்சைகளை அந்தப் பெண்ணுக்கு அளித்தனா். அதன் பயனாக அவா் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினாா்.
அலோபதி மருத்துவத்தைப் போன்றே சித்த வா்ம சிகிச்சைகளும் இதுபோன்ற அசாதாரண சூழல்களில் உயிா் காக்கக் கூடிய ஒன்றாக இருப்பதாக சித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.