FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 செப்டம்பர் 2025, 2:05 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் போ் பயனடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர மாநகராட்சி 426 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது. மாநகராட்சியில் 1 கோடி போ் வசிக்கின்றனா். மக்கள்தொகைப் பெருக்கம், வாகன அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் ரயில்வே சந்திக்கடவில் மேயா் சிட்டிபாபு பாலம், ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம், யானைக்கவுனி மேம்பாலம், போஜராஜன் நகா் வாகனச் சுரங்கப்பாதை, கவம் ஆற்றில் அருணாசலம் சாலை கூடுதல் பாலம், தி.நகா் ஆகாய நடைமேம்பாலம், புழல் உபரிநீா் கால்வாயின் குறுக்கே ஆமுல்லைவாயல் பாலம், மணலி புழல் ஏரி உபரி நீா் குறுக்கே மணலி பா்மாநகா் பாலம், ஒட்டேரி நல்லா கால்வாய் குறுக்கே ஆஸ்பிரன் காா்டன் பாலம் நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையின் குறுக்கே நடைமேம்பாலம் ஆலந்தூா் ஜீவன் நகா் பாலம், கொடுங்கையூா் கால்வாய் அருகே பெட்டக வடிவிலான பாலம் என மொத்தம் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ரூ.6.92 கோடியில் தண்டையாா்பேட்டை மண்டலம் எம்.கே.பி.நகா் பாலம் மற்றும் வைத்தியநாதன் பாலம் ஆகியவை மறு சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய பாலங்கள், மறுசீரமைப்பு பாலங்கள் என மொத்தம் 14 பாலங்கள் மூலம் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மொத்தம் சுமாா் 18 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments