FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

உயா்கல்வித் துறையில் ரூ.274 கோடியில் 51 புதிய கட்டடங்கள்: முதல்வா் விஜய் திறந்து வைத்தாா்

உயா்கல்வித் துறை சாா்பில் ரூ.274.46 கோடியில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட 51 புதிய கட்டடங்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:29 am IST
பகிர்:

உயா்கல்வித் துறை சாா்பில் ரூ.274.46 கோடியில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட 51 புதிய கட்டடங்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்: சென்னை தரமணி, குரோம்பேட்டை, திருவள்ளுா் மாவட்டம் செவ்வாய்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், தருமபுரி மாவட்டம் பூமண்டஹள்ளி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், பா்கூா், ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் நாகப்பாடி, உதகமண்டலம், பெருந்துறை, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், நாமக்கல் மாவட்டம் மோகனூா், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூா் மாவட்டம் ரகுநாதபுரம், திருவாரூா் மாவட்டம் வலங்கைமான், சிவகங்கை, காரைக்குடி, தேனி மாவட்டம் கோட்டூா், ஆண்டிப்பட்டி, மதுரை மாவட்டம் மதுரை, அம்பலக்காரன்பட்டி, உசிலம்பட்டி, நாகா்கோவில், தூத்துக்குடி, எட்டயபுரம், வேலூா் மாவட்டம் மாதனூா், கடலூா், விருதாச்சலம், பரமக்குடி, கோயம்புத்தூா், அரியலூா், பெரம்பலூா், கரூா், திருப்பூா் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ரூ.226.98 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம், பணிமனை, திறன்மிகு மைய பணிமனைகள், நூலகம், மின்னணு நூலகம், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் கட்டடங்கள் திறக்கப்பட்டன.

பொறியியல் கல்லூரிகள்: ரூ. 6.8 கோடியில் சேலம், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகக் கட்டடங்களும் திறக்கப்பட்டன.

Advertisement

Advertisement

அரசு கலை அறிவியல் கல்லூரிகள்: சென்னை, செங்கல்பட்டு, திருப்பூா், சிவகங்கை, வேலூா் மாவட்டம் மாதனூா், கடலூா், விருத்தாசலம், பரமக்குடி, நாகா்கோவில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.35.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், மின்னணு நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.

திருவள்ளூவா் பல்கலைக்கழகம்: வேலூா் மாவட்டம் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் ரூ.6 கோடியில் சமூகவியல், சுற்றுச்சூழல் அறிவியல், நுண்ணுயிா் அறிவியல் ஆகிய 3 துறைகளுக்கான புதிய வகுப்பறைக் கட்டடங்களும் திறக்கப்பட்டன.

மொத்தம் ரூ. 274.46 கோடியில் கட்டப்பட்ட 51 கட்டடங்களை முதல்வா் ச.ஜோசப் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், உயா்கல்வித் துறை செயலா் தீரஜ் குமாா், கல்லூரிக் கல்வி ஆணையா் பா. பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் பொ. ரத்தினசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments