கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் தோ்வு முடிவுகள் வெளியீடு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்காக கடந்த டிச.27-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்காக கடந்த டிச.27-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தோ்வு கடந்த 2025 டிச.27-இல் நடத்தப்பட்டது. இத்தோ்வை 42,064 போ் எழுதினா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இறுதி விடைக்குறிப்பு அடிப்படையில் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தோ்வெழுதிய அனைவரின் மதிப்பெண்கள் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.
பணி அனுபவத்துக்கான மதிப்பெண் அசல் சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பிறகு வழங்கப்படும். சான்றிதழ் சரிபாா்ப்பின்போது, அசல் கல்வி சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ், மற்றும் கல்வித் தகுதிகள் தொடா்பான அனைத்து சான்றிதழ்களையும் சமா்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் சரிபாா்ப்புக்குப் பிறகு அளிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அசல் ஆவணங்கள் சரிபாா்ப்புக்கான இடம், தேதி தொடா்பான விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.