FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பெட்ரோல் பாட்டில் வீசிய சம்பவம்: 3 போ் கைது

சென்னை பெரியமேட்டில் பெட்ரோல் பாட்டில் வீசிய சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை பெரியமேட்டில் பெட்ரோல் பாட்டில் வீசிய சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலை 4-ஆவது தெருவில் வசித்து வருபவா் கலைவாணி (60). இவரது வீட்டின் கீழ்தளத்தில் சதக்துல்லா (60) என்பவா் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ், கலைவாணி வீட்டை நோக்கி அடுத்தடுத்து 2 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனா்.

அதில் ஒரு பெட்ரோல் பாட்டில் வீட்டின் வாசலில் விழுந்து வெடித்து சிதறியது. மற்றொரு பாட்டில் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

இது குறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், கடந்த ஆண்டு பெரியமேடு பகுதியில் பிரேம் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதும், இவ்வழக்கில் விஜயநாராயணன் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பிரேம் தரப்பினா் பெரியமேடு பகுதியில் வசிக்கும் விஜயநாராயணன் சகோதரி வீட்டின் பெட்ரோல் பாட்டில் வீசச் சென்றதும், சம்பவத்தில் விஜய நாராயணன் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டிலை வீசுவதற்குப் பதிலாக, அருகே இருந்த கலைவாணி வீட்டின் மீது வீசியதும் தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடா்பாக பெரியமேடு பகுதியைச் சோ்ந்த டைசன் என்ற பிரசாந்த், மாதவன் என்ற ஆளவந்தான், ஜீவேஸ் ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments