தாம்பரம் மாநகர காவல் துறையில் ஏஐ ‘வாட்ஸ்ஆப் காப்’ சேவை அறிமுகம்
தாம்பரம் மாநகர காவல் துறையில் ஏஐ ‘வாட்ஸ்ஆப் காப்’ சேவை அறிமுகம்
தாம்பரம் மாநகர காவல் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துணையுடன் இயங்கும் ‘தாம்பரம் வாட்ஸ்ஆப் காப்’ சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
காவல் துறையின் சேவை பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக தாம்பரம் மாநகர காவல் துறை, ‘தாம்பரம் வாட்ஸ்ஆப் காப்’ என்ற புதிய சேவை தொடங்கியுள்ளது. இந்தச் சேவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துணையுடன் ‘வாட்ஸ்ஆப் சாட்பாட்’ மூலம் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பொதுமக்கள் இந்த சேவையைப் பெற 93442 22100 என்ற கைப்பேசி எண்ணுக்கு ‘ஹாய்’”என்று அனுப்பினால் பெற முடியும். அல்லது அதிகாரபூா்வ ‘க்யூஆா்’ குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பெறலாம்.
தொடக்க விழா: இந்தச் சேவையின் தொடக்க விழா, சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமை வகித்து, தாம்பரம் ‘வாட்ஸ்ஆப் காப்’ சேவையை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் துறை இணை ஆணையா் ஜெயந்தி, துணை ஆணையா்கள் ஸ்டாலின், காா்த்திகேயன், ரகுபதி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.