பலத்த மழை: சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் தாமதமாக தரையிறக்கம்
சென்னை, புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.
சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால், அந்தமான், தில்லி, கோவா, ஹைதராபாத், திருச்சி, கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகின. இதனால் சென்னைக்கு வரவேண்டிய பயணிகளும், சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல காத்திருந்த பயணிகளும் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.