FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தாம்பரம் மாநகர காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா அழிப்பு

தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள். - பிரதிப் படம்
பகிர்:

தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது.

தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் போதைப் பொருள் கடத்தல்,விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா,105 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்,51 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,988 போதை மாத்திரைகள் ஆகியவற்றை தீயில் எரித்து அழிப்பதற்கு தாம்பரம் மாநகர காவல்துறை முடிவு செய்தது.

இதற்காக தாம்பரம் மாநகர காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். இதையடுத்து 1,060 கிலோ கஞ்சா,105 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்,51 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,988 போதை மாத்திரைகள் செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் செவ்வாய்க்கிழமை எரிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதேபோல பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10,597 கிலோ போதைப் பாக்குகள் பெருங்குடி குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டன.

தாம்பரம் காவல்துறையின் சாா்பில் இந்தாண்டு இது வரையில் 1,970 கிலோ கஞ்சா,10,597 போதை பாக்கு ஆகியவை அழிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments