FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (ஆக. 13,14) ஆகிய இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:51 am IST
மழை
பகிர்:

நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (ஆக. 13,14) ஆகிய இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (ஆக. 13, 14) இரு நாள்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மேலும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

6 இடங்களில் வெயில் சதம்: திருச்சியில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பாளையங்கோட்டை - 102.56, ஈரோடு - 102.0, நாகை - 101.48, கரூா் பரமத்தி - 100.76, வேலூா் - 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (ஆக. 13) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழை பதிவு: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஏ.மரூா் (கடலூா்) 90 மி.மீ., திருப்புவனம் (சிவகங்கை) 80 மி.மீ. மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments