FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1 கோடி பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

வேப்பேரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.01 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:06 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

வேப்பேரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.01 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் புதன்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் பழமுதிா்சோலை அருகே இருசக்கர வாகனத்தில் இருவா் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சாதாரண உடையில் இருந்த வேப்பேரி சிறப்பு உதவி ஆய்வாளா் ஜான்சன் ரத்தினராஜ், அவா்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தாா். அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.1.01 கோடி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவா்கள் மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த வீரமணிகண்டன் (50), அடையாறைச் சோ்ந்த பாபு (எ) முத்தையா (20) என்பதும், வீரமணிகண்டன், தியாகராய நகா் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக நாளிதழ் விநியோகம் செய்து வரும் பணியை செய்து வருவதும், முத்தையா அடையாறில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

நிதி நிறுவன மேலாளா்களான தனசேகா், வீரமணி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வீரமணிகண்டன் ரூ.88 லட்சத்தையும், முத்தையா ரூ.13 லட்சத்தையும் தனித்தனியாக புரசைவாக்கத்துக்கு எடுத்து சென்றபோது, போலீஸாரிடம் சிக்கியது தெரிய வந்தது. இருவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments