சுதந்திர தின விழா: புனித ஜார்ஜ் கோட்டையில் மூன்றாவது ஒத்திகை!
புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது பற்றி..
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று மூன்றாவது முழு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மிகக் கம்பீரமாக நடைபெற்றது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இதில் பங்கேற்றனர்.காவல் துறையினர், கவசப் படை மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கோட்டை மற்றும் மெரினா சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒத்திகை நாள்களில் காலை நேரத்தில் சிறப்புப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.