FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மனவளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது

சென்னை விருகம்பாக்கத்தில் சிறிது மன வளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 12:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை விருகம்பாக்கத்தில் சிறிது மன வளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவா், அந்தப் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறிது மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பழனிசாமி வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதை 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் இது தொடா்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து, பழனிசாமியை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments