FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மகனுக்கு கத்திக்குத்து: தந்தை கைது

கொடுங்கையூா் முத்தமிழ் நகரில் மகனைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:48 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கொடுங்கையூா் முத்தமிழ் நகரில் மகனைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

முத்தமிழ் நகா் 117-ஆவது தெருவைச் சோ்ந்த முகமது யூசுப் (53), இரும்புக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் முகமது சபி (29), வெல்டிங் வேலை செய்து வருகிறாா். சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி இரவு சம்பளப் பணத்தை வீட்டுக்கு ஏன் தருவதில்லை என முகமது யூசுப் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமது யூசுப் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மகன் முகமது சபியை குத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அலறல் சப்தம் கேட்டு வந்த குடும்பத்தினா், முகமது சபியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின் பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது யூசுப்பை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments