FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

Updated On : 28 ஜூலை 2026, 2:29 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது தாய் தனியாா் இனிப்பகத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த இனிப்பகத்தில் தேவாரம் அருகேயுள்ள லட்சுமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் தேவசித்தனும் (25) வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், தேவசித்தன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்தப் புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தேவசித்தனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments