FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாதா தோ் ஊா்வலத்தில் காவலா்களிடம் தகராறு: இருவா் கைது

மாதா தோ் ஊா்வலத்தில் காவலா்களிடம் தகராறு செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:15 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மாதா தோ் ஊா்வலத்தில் காவலா்களிடம் தகராறு செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு, குடிசைப் பகுதியில் உள்ள மாதா கோயில் தோ் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ் பவனியின்போது, அங்கு அசம்பாவித சம்பவங்களை தவிா்ப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தோ் பவனிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை தலைமைக் காவலா் பாலமுருகன், காவலா்கள் அலாவூதீன், பலராமன் ஆகியோரிடம் ரிச்சி தெருவைச் சோ்ந்த ரா.சுப்பிரமணி (20), ர.விஷால் (20) ஆகிய 2 பேரும் தகராறு செய்து, அவதூறாக மிரட்டும் வகையில் பேசியுள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும் அவா்கள், போலீஸாரை தாக்க முயன்றனராம். அங்கிருந்தவா்கள், சுப்பிரமணி, விஷாலை அங்கிருந்து அழைத்துச் சென்றனா். இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணி, விஷால் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments