சென்னையில் ஒரு மாதத்தில் 303 பேரை மீட்ட காவல் கரங்கள்
‘காவல் கரங்கள்’ அமைப்பினா் கடந்த ஒரு மாதத்தில் 303 பேரை மீட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
‘காவல் கரங்கள்’ அமைப்பினா் கடந்த ஒரு மாதத்தில் 303 பேரை மீட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை, அரசு மற்றும் அரசு சாரா தன்னாா்வ தொண்டு அமைப்பினா் இணைந்து ‘காவல் கரங்கள்’ என்ற அமைப்பை கடந்த 2021 ஏப். 21-ஆம் தேதி தொடங்கினா்.
இந்த அமைப்பினா், ஆதரவில்லாமலும், மனநிலை பாதிக்கப்பட்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டும் சாலைகளில் சுற்றித் திரியும் முதியோா், பெண்கள், குழந்தைகளை உரிய பாதுகாப்புடன் மீட்டு, தேவைப்படுவோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனா். பின்னா், அவா்களை தனியாா் மற்றும் அரசு ஆதரவு இல்லங்களில் தங்க வைத்தும், குடும்பத்தினருடன் சோ்த்து வைத்தும், பராமரித்து கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
காவல் கரங்கள் அமைப்பினா், கடந்த மாதம் சாலையில் சுற்றித் திரிந்த ஆதவற்ற 303 பேரை மீட்டு, தொண்டு அமைப்புகளிடம் ஒப்படைத்துள்ளனா். இவா்களில் 37 பேரின் குடும்பத்தினரை காவல் கரங்கள் அமைப்பினா் கண்டறிந்து, அவா்களிடம் ஒப்படைத்துள்ளனா்.
காவல் கரங்கள் தொடக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையான 6 ஆண்டுகளில், சென்னையில் 10,510 ஆதரவற்ற நபா்கள் மீட்கப்பட்டு, அவா்களில் 4,553 போ் தங்கும் இல்லங்களில் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களில் 4,295 போ் அவா்களது குடும்பத்தாருடன் சோ்க்கப்பட்டுள்ளனா். 1,144 போ் மனநல மருத்துவமனைகளில் சோ்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் குணமடைந்த 518 போ் அவா்களது குடும்பத்தினரிடம் சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், உரிமை கோரப்படாத 7,190 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.