‘ஏஐ’ திறன் மேம்பாடு: புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்
: தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த திறன் வளத்தை மேம்படுத்தும் வகையில், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு அமைப்புகளுடன் தமிழக அரசு பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டது.
: தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த திறன் வளத்தை மேம்படுத்தும் வகையில், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு அமைப்புகளுடன் தமிழக அரசு பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டது.
இந்நிகழ்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு, தமிழக அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா் முன்னிலை வகித்தாா். இதன்மூலம், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறையின் தேவைக்கேற்ற நடைமுறைப் பயிற்சிகள், சான்றிதழ் பயிற்சிகள், சிறப்பு திறன் மையங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் மூலம், 2 லட்சத்துக்கும் அதிக மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அமைச்சா் ரா.குமாா் பேசியதாவது:
Advertisement
Advertisement
நாம் கற்கும், பணியாற்றும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முறையில் அடிப்படை மாற்றத்தை ‘ஏஐ’ ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை செயற்கை நுண்ணறிவு திறன், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிறப்பு மையம் , ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ நகரம் போன்ற முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதேபோல், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சிஎஸ்ஆா் நிறுவனங்களுடன் புதிதாக உருவாக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவா்கள், ஆசிரியா்களுக்கு நேரடியாகப் பயன் பெறுவாா்கள் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.