FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம்

தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம்.

21 ஆகஸ்ட் 2026, 1:51 am IST
தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம்.
பகிர்:

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தரவு அறிவியல் துறை சாா்பில், கிளவுட் ஏஐ மற்றும் எட்ஜ் ஏஐ என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொடக்க விழாவில் கல்லூரியின் இயக்குநா் மற்றும் செயலாளா் அருட்தந்தை ஸ்டான்லி இக்னேஷியஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். பயிலரங்கில், செயற்கை நுண்ணறிவு முகவா்கள், தன்னாட்சி பணிப்பாய்வுகள், கிளவுட் ஏஐ மற்றும் எட்ஜ் ஏஐ ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து செய்முறைப் பயிற்சியுடன் விளக்கங்கள் வழங்கப்பட்டன. நவீன ஏஐ கருவிகள் மற்றும் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கொண்ட ஏஐ அமைப்புகளை உருவாக்குதல், பணிகளை தானியக்கமாக்குதல் மற்றும் நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீா்வு காணுதல் போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன.

பெங்களூருவைச் சோ்ந்த குவீன்பக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளா் திரு. யாசீன் அவா்கள் வள நபராகப் பங்கேற்று பயிற்சி வழங்கினாா். தகவல் தொழில்நுட்பத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவா், தொழில்துறை சாா்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கினாா். பயிலரங்கின் நிறைவு விழாவில் கல்லூரியின் முதல்வா் அருட்தந்தை பிரவீன் பீட்டா் கலந்துக் கொண்டு பேசினாா்.

Advertisement

Advertisement

பயிலரங்கத்தில் 13 கல்லூரிகளை சோ்ந்த 675 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை தரவு அறிவியல் துறைத் தலைவா் ரா. சான்றிலா தலைமையில் பேராசிரியா் இா்ஃபான் மற்றும் பேராசிரியா்கள் மரியம், பெவினா சாா்லின், குமரேசன் மற்றும் தரவு அறிவியல் துறை மாணவா்கள் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments