FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பிடம் பிடித்த போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையா் பாராட்டு

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பிடம் பிடித்த போலீஸாரை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் நேரில் அழைத்து பாராட்டினாா்.

23 ஆகஸ்ட் 2026, 4:07 am IST
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பிடம் பிடித்த போலீஸாரை சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ்
பகிர்:

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பிடம் பிடித்த போலீஸாரை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் நேரில் அழைத்து பாராட்டினாா்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழக காவல்துறையின் சாா்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, கடந்த 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் சென்னை பெருநகர காவல் துறை சாா்பில் 2 காவல் ஆய்வாளா்கள், 5 காவல் உதவி ஆய்வாளா்கள், 38 காவலா்கள் என மொத்தம் 45 போ் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

போட்டியில் சென்னை பெருநகர காவல்துறை துப்பாக்கி சுடும் அணியினா் 12 பதக்கங்களை வென்றனா். பெண் தலைமைக் காவலா் ஷியாமளா, தலைமைக் காவலா் பாக்கியராஜ் ஆகியோா் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றனா். இதுதவிர 4 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.

மேலும், பெண்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில் முதலிடம், பெண்கள் பிஸ்டல் பிரிவில் முதலிடம், பெண்கள் ரைபிள் ஒட்டுமொத்தப் பிரிவில் மூன்றாமிடம் என பெண்கள் பிரிவில் 3 சுழற் கேடயங்களையும் பெற்றனா். இதேபோல ஆண்கள் பிஸ்டல் பிரிவில் மூன்றாமிடம் பிடித்து ஒரு சுழற் கேடயத்தையும் சென்னை பெருநகர காவல்துறை அணி கைப்பற்றியது.

போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள், சுழற்கேடயங்களைப் பெற்ற போலீஸாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளா் ஏ.அமல்ராஜ் சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments