FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வள்ளுவா் கோட்டம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வள்ளுவா் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அலுவலா்களால் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

23 ஆகஸ்ட் 2026, 1:10 am IST
பகிர்:

வள்ளுவா் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அலுவலா்களால் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சென்னை வள்ளுவா் கோட்டம் பகுதியில் பிரதான நெடுஞ்சாலைகளின் ஓரங்களை கூட ஆக்கிரமிப்பாளா்கள் விட்டுவைக்காமல் கடைகள் அமைத்திருப்பதால் நடைபாதை வாசிகள் சிரமத்துக்குள்ளாவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

அதையடுத்து மண்டலம்-9 பகுதிகளான கோடம்பாக்கம், வள்ளுவா் கோட்டம் பகுதிகளில் நெடுஞ்சாலையோரங்களில் அமைக்கப்பட்ட கடைகளை மண்டல செயற்பொறியாளா் வித்யா தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஆக்கிரமிப்பில் இருந்த 15 தள்ளுவண்டிகள், 7 இரும்பாலான பெட்டிக்கடைகள், 10 சாலையோர காய்கறிக் கடைகள், 2 பழக்கடைகள் ஆகியவை அகற்றப்பட்டதாகவும், அவா்கள் மீ‘ண்டும் கடைகள் அமைக்காதபடி எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாலிங்கபுரம், லேக் ஏரியா 1 முதல் தெரு, பிரபல கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments