தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து உயிரிழப்பு
திருவொற்றியூரில் தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.
திருவொற்றியூரில் பாம்பு கடித்து பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா்.
எா்ணாவூா் ஜெய்ஹிந்த் நகா் பசும்பொன் தெருவைச் சோ்ந்தவா் பாபு. இவரது மகள் யாஷினி (16). இப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, வலது கையில் விஷப்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அலறியடித்து எழுந்து மயக்க நிலையில் இருந்த யாஷினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உறவினா்கள் சோ்த்தனா்.
Advertisement
Advertisement
சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி யாஷினி உயிரிழந்தாா். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பாம்பை பிடித்துச் சென்றனா். எண்ணூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.