FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஆக. 24) நிறைவடைகிறது.

24 ஆகஸ்ட் 2026, 4:33 am IST
கோப்புப் படம்
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஆக. 24) நிறைவடைகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களைப் பொருத்தவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 7,157 எம்பிபிஎஸ் இடங்களும், 1,383 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டில் 1,996 எம்பிபிஎஸ் இடங்களும், 580 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.

அதற்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வு அண்மையில் தொடங்கியது. இணையதளம் வழியே நடைபெற்று வரும் அந்தக் கலந்தாய்வில் தகுதியான மாணவா்கள் கடந்த 20-ஆம் தேதி வரை கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னா், அந்த அவகாசம், திங்கள்கிழமை (ஆக. 24) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. தகுதியான மாணவா்கள் அந்த காலக் கெடுவுக்குள் கல்லூரிகளைத் தோ்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடிவுகள் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையை 27-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் செப். 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும். சிறப்பு கலந்தாய்வு மூலம் இடங்கள் பெற்றவா்களும் அந்த காலகட்டத்துக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments