FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஆக.13-இல் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 13-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 7:45 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 13-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள 13,999 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூலை 27-இல் நிறைவடைந்தது. அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 41 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 31 ஆயிரம் பேரும் என மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்திருந்தனா்.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

அதற்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று செவ்வாய்க்கிழமை (ஆக.4) தொடங்குகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://tnmedicalselection.net2 என்ற இணையதளத்தில் வரும் 13-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 31-ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பா் 16-ஆம் தேதியும், இறுதி சுற்று கலந்தாய்வு அக்டோபா் 3-ஆம் தேதியும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதற்கேற்ப விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments