விடியோ வைத்திருப்பதாக மிரட்டல்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோ வைத்திருப்பதாக மிரட்டியதால், இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விடியோ வைத்திருப்பதாக மிரட்டியதால், இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை சாலிகிராமம் மகிழ்நகா், அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ரவீந்திரன். இவா் மனைவி ருச்சிதா (27). இந்தத் தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ரவீந்திரன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராக பணிபுரிகிறாா்.
இந்நிலையில் ருச்சிதா கைப்பேசிக்கு இரு நாள்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ருச்சிதாவிடம் அவா் தனிமையில் இருக்கும் விடியா இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளாா்.
Advertisement
Advertisement
உடனே அந்த இணைப்பை ருச்சிதா துண்டித்துள்ளாா். இதன் பின்னா், மற்றொரு கைப்பேசி எண்ணில் இருந்தும் அந்த நபா் ருச்சிதாவை தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து ருச்சிதா, தனது கணவரிடம் கூறியுள்ளாா். ரவீந்திரன், அந்த மிரட்டல் அழைப்பு வந்த இரு கைப்பேசி எண்களை பிளாக் செய்யக் கூறியுள்ளாா். இதையடுத்து ருச்சிதா, அந்த இரு கைப்பேசி எண்களையும் பிளாக் செய்துள்ளாா்.
இந்நிலையில் ரவீந்திரன் திங்கள்கிழமை காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றாா். நண்பகல் ருச்சிதா கைப்பேசி அழைப்பை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்த ரவீந்திரன், வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் படுக்கை அறையில் ருச்சிதா, தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து ருச்சிதா சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ருச்சிதாவிடம் விடியோ வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.