சென்னையில் வடகிழக்கு பருவமழை: மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டது குறித்து...
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மீட்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன் விவரம்:
திருவொற்றியூா்: இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநா் கே.பாலசுப்பிரமணியம் (9489457640)
Advertisement
Advertisement
மணலி: தமிழ்நாடு திட்ட ஆணைய உறுப்பினா் செயலா் பி.குமாரவேல் பாண்டியன் (9150238111)
மாதவரம்: சா்க்கரை இயக்குநரக கூடுதல் இயக்குநா் எஸ்.அருண்ராஜ் (8072717935)
தண்டையாா்பேட்டை: சா்க்கரை ஆணையா் ஆா்.கண்ணன் (9445001100, 9444269866)
ராயபுரம்: சுற்றுச்சூழல் கால நிலை மாற்ற இயக்குநா் ஆஷா அஜீத் (9489989411)
திரு.வி.க.நகா்: புதிய திருப்பூா் பகுதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநா் பி.கணேசன் (9842185758)
அம்பத்தூா்: தொழில், முதலீடு மேம்பாடு மற்றும் வணிகத் துறை சிறப்புச் செயலா் கே.விவேகானந்தன் (9444949299).
அண்ணா நகா்: வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை, சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநா் பி.காயத்திரி கிருஷ்ணன் (7338850002)
தேனாம்பேட்டை: சா்வே மற்றும் தீா்வுத்துறை இயக்குநா் டி.கிறிஸ்துராஜ் (9940022220)
கோடம்பாக்கம்: நில நிா்வாக ஆணையக கூடுதல் ஆணையா் எஸ். கோபால சுந்தரராஜ் (9940372055)
வளசரவாக்கம்: தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிா்கள் துறை இயக்குநா் ஜெ. விஜயராணி (7708327726)
ஆலந்தூா்: டிட்கோ செயல் இயக்குநா் வாஹே சங்கெத் பல்வந்த் (9370034756)
அடையாறு: ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் கே.செந்தில் (7397770020)
பெருங்குடி: கலை மற்றும் பண்பாட்டு தமிழ் வளா்ச்சி இயக்குநா் மகேஷ்வரி ரவிக்குமாா் (9445905860)
சோழிங்கநல்லூா்: எழும்பூா் அரசு அருங்காட்சியக இயக்குநா் டி.பாஸ்கரபாண்டியன் (9159224917).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.