FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

இடியும் நிலையிலான கட்டடங்களை அகற்ற விரைந்து நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையொட்டி, மதுரை மாவட்டத்தில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

22 அக்டோபர் 2026, 3:33 am
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையொட்டி, மதுரை மாவட்டத்தில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, பொது கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், அகற்றப்படும் கட்டடங்களுக்குப் பதிலாக மாற்றுக் கட்டடங்களை உடனடியாக ஏற்பாடு செய்து, அரசு நிா்வாகப் பணிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மாநகராட்சி ஆணையா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், ஊராட்சிகள் உதவி இயக்குநா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா், நகராட்சி ஆணையா்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா், முதன்மைக் கல்வி அலுவலா், வருவாய்க் கோட்டாட்சியா்கள் தங்கள் நிா்வாகக் கட்டுப்பாட்டுக்குள்பட்ட அரசு, பொது கட்டடங்களின் உறுதித் தன்மையை உறுதி செய்து, உடனடியாக அறிக்கை அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments