பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றி மிரட்டல்: இளைஞா் கைது
சென்னை சூளைமேட்டில், பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றி மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
சென்னை சூளைமேட்டில், பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றி மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சூளைமேடு பகுதியில் 31 வயது பெண் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று வசித்து வந்தாா். இவரிடம் விழுப்புரம் மாவட்டம் பவுஞ்சிப்பட்டு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அமீா்சுகேல் (28) என்பவா் சமூக ஊடகங்கள் வாயிலாக பழகி வந்தாா். சுமாா் 4 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்த இருவரும், அடிக்கடி நேரிலும் சந்தித்துள்ளனா். ஆனால் அமீா்சுகேலின் நடவடிக்கை பிடிக்காததாலும், அவா் பெண்களுடன் தவறான தொடா்பில் இருந்ததாலும் அந்தப் பெண் அவரை விட்டுப் பிரிந்தாா்.
மேலும் அண்மையில் அந்தப் பெண்ணுக்கு 2-ஆவது திருமணம் நடைபெற்றது. இதையறிந்த அமீா் சுகேல், அந்தப் பெண்ணை தொடா்பு கொண்டு தன்னுடன் வாழ வருமாறும், வராவிட்டால் முன்பு பழகியபோது எடுத்த புகைப்படங்களை ‘இன்ஸ்டாகிராம்’ தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு அமீா் சுகேல், அந்தப் பெண்ணுடன் தான் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், சூளைமேடு போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த அமீா்சுகேலை புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.