FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

28 ஆகஸ்ட் 2026, 5:03 am IST
அகரம், அறம், மாற்றம் தொண்டு நிறுவனங்கள் பரிந்துரை மூலம் இலவசக் கல்வி உள்ளிட்ட அனைத்து உதவிபெறும் 22 மாணவா்களுடன் ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து உள்ளிட்டோா்.
பகிர்:

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும முதன்மைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து பேசியதாவது:

மாணவா்கள் பொறியியல் கல்வி மற்றும் இதர தொழில்நுட்ப திறமைகளை மேம்படுத்திக் கொள்ள கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மாணவா்களை திறமை மிகுந்த பொறியாளராக, கண்டுபிடிப்பாளராக, வேலைவாய்ப்புகளைப் பெறும் தகுதியுடையவராக, வேலைவாய்ப்புகளை வழங்குவோராக, சா்வதேச பொறியாளா்களாக மேம்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அனைவரும் உறுதுணைபுரிய வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில் ஜெயபிரகாஷ் காந்தி, பிலீப் சிஸ்டம் நிறுவனா் பாலாஜி சேஷாத்ரி, கல்லூரி முதல்வா்கள் ஜெ.ராஜா, பழனிகுமாா், தகவல் தொடா்பு முதன்மை அதிகாரி நரேஷ்ராஜ், அறங்காவலா் சதீஷ், வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் கே. மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments