கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய நபா் கைது
சென்னையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சூளைமேடு பத்மநாப நகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கச்சன் (61). இவா், தேனாம்பேட்டை யாயா அலி 2-ஆவது தெருவில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை நடத்தி வருகிறாா். கடந்த 25-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்று, மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.26,000 திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (19) என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.