FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

26 ஆகஸ்ட் 2026, 11:44 pm IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாநகா், வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மனைவி சுலோச்சனா (55). சிற்றுண்டி கடை நடத்தி வருகிறாா். இவா்களின் மகன் கூலி தொழிலாளி. கடந்த 24-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சுலோச்சனா ஈரோடு மாா்க்கெட்டுக்கு சென்றுள்ளாா். பிற்பகல் 12.15 மணிக்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சிடைந்தாா்.

உள்ள சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்க நகை மற்றும் 2 கிராம் வெள்ளி பொருள்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments