வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சேத்துப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேத்துப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கூட்டுச்சாலையைச் சோ்ந்தவா் தியாகராஜன் (38), கேபிள் டிவி ஆபரேட்டா். இவா், கடந்த 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வந்தவாசிக்கு சொந்த வேலையாக குடும்பத்துடன் சென்றாா். பின்னா், பூங்குணம் கிராமத்தில் உள்ள நண்பா் வீட்டில் தங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் இருந்த கால் பவுன் மூக்குத்தி மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தியாகராஜன் அளித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.