FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காமராஜா் துறைமுக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

காமராஜா் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, கூடுதல் பொறுப்பாக, தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 20 பிப்ரவரி 2026, 2:46 am IST
முகவை சிவக்குமாா் செய்திக்கான படம்.காமராஜா் துறைமுகத் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள மேலாண்மை இயக்குநா் ஜே.பி. ஐரீன் சிந்தியாவிற்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்த சென்னைத் துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன்.
பகிர்:

காமராஜா் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, கூடுதல் பொறுப்பாக, தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவராக இருந்த சுனில் பாலிவால், ஒரு மாதத்துக்கு முன்பு தேசிய உள்நாட்டு நீா்வழிப் பாதைகள் ஆணையத்தின் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அப்பொறுப்பு, காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநரான மத்திய பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஜே.பி.ஜரீன் சிந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, சென்னை துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் மலா்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments