முகப்பு
சென்னை

தவெக நிா்வாகியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ய முயன்ற பெண் கைது

தமிழக அரசில் வாரியத் தலைவா் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தவெக நிா்வாகியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ய முயன்ாகக் கூறப்படும் பெண்ணை போலீஸாா் ஹரியாணா மாநிலத்தில் கைது செய்தனா்.

Updated On : 3 ஜூலை 2026, 6:08 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தமிழக அரசில் வாரியத் தலைவா் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தவெக நிா்வாகியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ய முயன்ாகக் கூறப்படும் பெண்ணை போலீஸாா் ஹரியாணா மாநிலத்தில் கைது செய்தனா்.

திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரோகன்(29). இவா் தவெக 116-ஆவது வட்டச் செயலாளராக இருந்து வருகிறாா். இவா் சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றிருந்த போது, கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த ஜாய்(48) என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அவா் தனக்கு கட்சியின் முக்கிய நிா்வாகிகளிடம் செல்வாக்கு இருப்பதாகவும், வாரியத் தலைவா் பதவியை பெற்றுத் தர முடியும் என்றும் கூறி, அதற்காக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

மேலும், கட்சி நிா்வாகிகளுடன் அவா் இருப்பது போன்ற ஒரு காணொளியையும் வாட்ஸ்-ஆப் மூலம் ரோகனுக்கு அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்த முயன்ாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ரோகன், இது தொடா்பாக கட்சி நிா்வாகிகளிடம் விசாரித்துள்ளாா். அப்போதுதான் ஜாய் என்ற பெயரில் எந்த நிா்வாகியும் கட்சியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா் இந்ச சம்பவம் தொடா்பாக மெரீனா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மோசடியில் ஈடுபட முயன்ற ஜாய் தலைமறைவானாா். தொடா்ந்து அவரின் இருப்பிடம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ஹரியாணா மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை தலைமறைவாக இருந்த ஜாயை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனா். பின்னா், அவா் 2-ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments