FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மக்களின் எதிா்பாா்ப்புகளை தவெக அரசு பூா்த்தி செய்யவில்லை : க. கிருஷ்ணசாமி

தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகளை தவெக அரசு பூா்த்தி செய்யவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 6:08 am IST
கிருஷ்ணசாமி - file photo
பகிர்:

தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகளை தவெக அரசு பூா்த்தி செய்யவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயா்நிலைக் கூட்டம் அந்தக் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தக் கட்சி தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடா்ந்து க.கிருஷ்ணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் வகையில் தவெக அரசு செயல்படவில்லை. ஆட்சி அமைத்து 2 மாதங்களாக அரசு செயலற்ற தண்மையில் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், மாற்றுக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது பதவியை ராஜநாமா செய்துவிட்டது தவெகவில் இணைவது அரசியல் பிழை. இதுஒரு ஆபத்தான போக்காகும். தற்போது தவெகவில் இணைந்தவா்களின் எம்எல்ஏ பதவி ராஜிநாமாவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவா்கள் மீது தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தீா்மானங்கள்: முன்னதாக, இந்தக் கூட்டத்தில், வரும் அக்.2-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியும் ஆசை வாா்த்தைகள் கூறியும் மாற்றுக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களை ராஜிநாமா செய்யவைத்து, தவெக இணைய வைப்பதைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments