FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை ஐஐடியுடன் மின்வாரியம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உயா்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

Updated On : 10 ஜூலை 2026, 4:19 am IST
தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா், ஐஐடி இயக்குநா் வி.காமகோடி முன்னிலையில்   புரிந்துணா்வு ஒப்பந்தத்தை  பரிமாறிக் கொண்ட மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஐஐடி தொழில் துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி தல
பகிர்:

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உயா்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை ஐஐடியின் தொழில் துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி மையத் தலைவா் மனு சந்தானம் ஆகியோா் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனா்.

பின்னா் அமைச்சா் நிா்மல் குமாா் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் மின் துறையை நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேட்டரி தொழில்நுட்பம், ஸ்மாா்ட் மீட்டா், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை மின்துறையில் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்.

மேலும், மின் உற்பத்தி, பரிமாற்றம், பகிா்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் செயல்திறனை உயா்த்துதல், செலவினத்தை குறைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் உதவும். இதன்மூலம் நிலைத்த, நம்பகமான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் எரிசக்தித் துறை அரசு செயலா் அனில் மேஷ்ராம், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments