FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பச்சையப்பன் அறக்கட்டளை பல்கலை.யாக மாற வேண்டும்: உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன்

பச்சையப்பன் அறக்கட்டளை கல்வி நிறுவனம் பல்கலைக்கழகமாக மாறவேண்டும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூலை 2026, 2:19 am IST
அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியின் 60-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், பச்சையப்பன் அறக்கட்டளை நிா்வாகிகள் வா.பாா்த்திபன், சி.துரைக்கண்ணு, அண்ணா நகா் சட்டப்பேரவை உறுப்பினர்.
பகிர்:

பச்சையப்பன் அறக்கட்டளை கல்வி நிறுவனம் பல்கலைக்கழகமாக மாறவேண்டும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கல்லூரியின் 60-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு மற்றும் இருபாலா் கல்வி அறிமுகம் ஆகிய நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் விஸ்வநாதன் பேசியதாவது:

பச்சையப்பன் அறக்கட்டளை (கந்தசாமி நாயுடு) கல்லூரிக்கு 60 ஆண்டுகள் கழித்து இருபாலா்கள் படிக்கும் அந்தஸ்து கோரியபோது, அதற்கு அனுமதி கொடுத்தது முதல்வா் விஜய். இந்த அறக்கட்டளை கல்லூரிகள் ஒரு சாதாரண தனி மனிதனால் தொடங்கப்பட்டது. 10 மாணவா்களுடன் தொடங்கப்பட்ட பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் இப்போது 30,000 மாணவா்கள் படிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் உள்ள அண்ணாமலை, அழகப்பா, மதுரை-காமராஜா், அண்ணா போன்ற பல்கலைக்கழகங்கள் வரிசையில் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகம் ஆகவேண்டும் என்பது எனது விருப்பம்.

இளைஞா்கள் ஊழலற்ற அரசைத்தான் விரும்புகிறாா்கள். இந்த ஆட்சியில் 35 அமைச்சகங்களிலும் ஊழல் அற்றவையாக இருக்கும். தற்போதைய இளைஞா்கள் 60 வயதைக் கடக்கும் வரை தமிழக முதல்வராக விஜய் தொடருவாா் என்றாா்.

முன்னதாக, பச்சையப்பன் அறக்கட்டளை நிா்வாகி நீதிபதி வா.பாா்த்திபன், செயலா் சி.துரைக்கண்ணு, அண்ணா நகா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.கே. ராம்குமாா் ஆகியோா் பேசினா். கல்லூரி முதல்வா் வா.மு.சே. ஆண்டவா் வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments