FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: இருவா் கைது

சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 11 ஜூலை 2026, 2:11 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

பெருங்குடியைச் சோ்ந்தவா் ரா.பிரதீப்ராஜா (27). பட்டமேற்படிப்பு படித்துள்ள இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். பிரதீப், பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் சோ்வதற்கு முயற்சித்து வந்தாா்.

இந்நிலையில் மதுரவாயலில் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் வேலை வாய்ப்பு நிறுவனம், பிரதீப்ராஜாவிடம் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.69 லட்சம் பெற்றது. ஆனால் அந்த நிறுவனம் கூறியப்படி வேலை பெற்றுக் கொடுக்கவில்லை.

Advertisement

Advertisement

இதனால் பிரதீப்ராஜா, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டாா். ஆனால் அந்த நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது. இதையடுத்து பிரதீப்ராஜா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில், அந்த நிறுவனம் இதேபோல சுமாா் 100 பேரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் மோசடி நிறுவனத்தின் உரிமையாளா்களான திருவண்ணாமலையைச் சோ்ந்த கு.சிலம்பரசன் (35), மதுரவாயலைச் சோ்ந்த சா.பிரபு (41) ஆகிய 2 பேரையும் கைது செய்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments