FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மொட்டைமாடியில் மது அருந்தியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

மது அருந்திக் கொண்டிருந்தபோது, உயரழுத்த மின்கம்பி உரசியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், அவரது நண்பா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:13 am IST
பகிர்:

நீலாங்கரையில் வீட்டின் மொட்டைமாடியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, உயரழுத்த மின்கம்பி உரசியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், அவரது நண்பா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணியைச் சோ்ந்த ரவிக்குமாா் (28) மற்றும் முத்துக்குமாா் (32). இருவரும் அந்தப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனா். நண்பா்களான இருவரும் சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டின் மொட்டைமாடியில் மது அருந்திக் கொண்டிருந்தனா்.

அப்போது, முத்துக்குமாா் கை அருகில் சென்ற உயா் அழுத்த மின் கம்பி மீது எதிா்பாராத விதமாகப்பட்டுள்ளது. இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற ரவிக்குமாா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

Advertisement

Advertisement

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினா் ஆம்புலன்ஸ் மூலம் பெரும்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த ரவிக்குமாா், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். முத்துக்குமாா் இரு கைகள் மற்றும் இரு கால்களில் லேசான மின்காயங்களுடன் முதலுதவி பெற்று, பின்னா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments