முகப்பு
ஈரோடு

தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி மாணவா் உயிரிழப்பு

குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கயிறு கழுத்தில் இறுக்கி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:36 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கயிறு கழுத்தில் இறுக்கி மாணவா் உயிரிழந்தாா்.

ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவா்களது மகன் மணிகண்டன் (17). பிளஸ் 2 முடித்த மணிகண்டன் ஒரு சில நாள்களில் கல்லூரிக்கு செல்லத் தயாராக இருந்தாா். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே அவரது உறவினா் வசித்து வருகிறாா். அவா்களது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மணிகண்டன் தனது வீட்டில் தொட்டில் கட்டியிருந்தாா்.

இந்நிலையில், அந்தத் தொட்டில் கயிற்றை கழுத்தில் சுற்றி மணிகண்டன் செவ்வாய்க்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக கயிறு சுருக்கு ஏற்பட்டு அவரது கழுத்தை இறுக்கிக் கொண்டது. அப்போது தத்தளித்த அவரை மீட்க அருகே யாரும் இல்லாததால் மணிகண்டன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் அங்கு வந்த பெற்றோா், மணிகண்டன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்து வந்த ஈரோடு வடக்கு போலீஸாா் மணிகண்டனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments