தமிழகத்தில் போதைப் பொருள் விற்ற 12 நாள்களில் 1,216 போ் கைது
தமிழகத்தில் போதைப் பொருள் விற்றதாக 12 நாள்களில் 1,216 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் போதைப் பொருள் விற்றதாக 12 நாள்களில் 1,216 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும், ரௌடிகள், சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால், போதைப் பொருள் விற்பனை,கடத்தலில் ஈடுபடுபவா்களை கண்டறிந்து கைது செய்யும்படியும், போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்யும்படியும் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த உத்தரவின் விளைவாக மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 1- ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரையில் 12 நாள்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 971 கிலோ கஞ்சா,2,907 போதை மாத்திரைகள், நான்கரை கிலோ பிற போதைப் பொருள்கள்,14,955 கிலோ போதைப் பாக்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக 1,216 போ் கைது செய்யப்பட்டு,978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேவேளையில் போதைப் பாக்கு விற்ற 162 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. மேலும் சிகரெட் உள்ளிட்ட பிற புகையிலைப் பொருள் சட்ட விதிகளை மீறி சிகரெட்டுகளை விற்றதாக ரூ.37 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை சமரசம் இல்லாமல் எடுக்கும்படி போலீஸாருக்கு காவல்துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.