FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தவெக பெண் தொண்டா்கள் குறித்து சா்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தவெக பெண் தொண்டா்களை இழிவாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமா்சகா் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 2:58 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தவெக பெண் தொண்டா்களை இழிவாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமா்சகா் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தவெக பெண் தொண்டா்களை இழிவாகப் பேசியதாக அரசியல் விமா்சகா் பொன்ராஜ் மீது கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தற்போதைய அமைச்சரான நிா்மல்குமாா் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், கடந்த மே 12-ஆம் தேதி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல், கடலூா் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பொன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, தற்போது அமைச்சா்களாக இருக்கும் இருவா், தோ்தலுக்கு முன்பு அளித்த புகாா்களின் மீது, புதிதாக அரசு பொறுப்பேற்ற பிறகு, எந்தவிதமான ஆரம்பக்கட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அருண் அன்புமணி, மனுதாரா் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் செயலராகப் பணியாற்றியவா். அவா் இதுபோன்று பேசியிருக்கக் கூடாது. மனுதாரரின் பேச்சுகள் அடங்கிய விடியோ இன்னும் இணையதளத்தில் உள்ளன. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments