FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போதைப் பாக்கு விற்றதாக 7 நாள்களில் 105 போ் கைது

சென்னையில் போதைப் பாக்கு விற்றதாக 7 நாள்களில் 105 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:30 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் போதைப் பாக்கு விற்றதாக 7 நாள்களில் 105 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 6 முதல் 12-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 435 கிலோ குட்கா, போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் பயன்படுத்தப்பட்ட 3 இரு சக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் உள்பட சட்ட விரோத பொருள்களைக் கடத்தி வருபவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments