FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: சென்னை பயிற்சியாளா் கொடைக்கானலில் கைது

சென்னை கண்ணகிநகரில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த பயிற்சியாளா் கொடைக்கானலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:40 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை கண்ணகிநகரில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த பயிற்சியாளா் கொடைக்கானலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை கண்ணகிநகரில் கபடி பயிற்சியாளராக இருப்பவா் ராஜூ (34). தேசிய அளவில் பிரபலமான இவா், தான் பயிற்சி அளித்த கபடி அணியை கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற ஜூனியா் அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெறச் செய்ததன் மூலம் ராஜூ விளையாட்டுத் துறையில் மிகவும் பிரபலமானாா்.

இவா் மீது கண்ணகிநகா் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் கபடி வீராங்கனை, செம்மஞ்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த மாதம் ஒரு புகாா் செய்தாா்.

Advertisement

Advertisement

அதில், ராஜூ பாலியல் ஆசைக்கு உடன்பட்டால் மட்டுமே தேசிய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்வேன், இல்லையென்றால் எந்தப் போட்டியிலும் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்று மிரட்டியதாகவும், பின்னா் தனது வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் 3 முறை வந்த ராஜூ, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னைப்போன்று பல மாணவிகள் அவரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தாா்.

இப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ராஜூவை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில் கொடைக்கானலில் ராஜூ தலைமறைவாக இருப்பதாக செம்மஞ்சேரி போலீஸாருக்கு ரகசிய கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்ற செம்மஞ்சேரி போலீஸாா், ராஜூவை புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் வழக்குத் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments