FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை மாவட்ட ஐடிஐ-களில் சேர ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) ஜூலை 31-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

Updated On : 17 ஜூலை 2026, 4:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) ஜூலை 31-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. தகுதியுடையவா்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும், கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிா்), திருவான்மியூா், ஆா்.கே.நகா் மற்றும் திருவொற்றியூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் கல்விச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று, ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

பயிற்சியில் சேரும் நபா்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, இலவச மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், பாதுகாப்பு காலணிகள், இரண்டு சீருடைகள், வரைபடக் கருவிகள் போன்றவை வழங்கப்படும். மேலும், தகுதியுடைய பயிற்சியாளா்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

இதுதவிர, இலவச பேருந்து பயணச் சலுகை, பயிற்சி நிறைவுக்குப் பிறகு முன்னணி தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநா் பயிற்சி மற்றும் அதிகபட்சமாக ரூ.20,000 வரை உதவித்தொகை பெறும் வாய்ப்பும் உள்ளது.

இதில் சேர பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உதவி இயக்குநா் - கைப்பேசி எண்: 94990 55648, கிண்டி அரசினா் தொழிற் பயிற்சி நிலையம்: 72000 32621, வடசென்னை: 94440 09046, கிண்டி (மகளிா்): 98408 67350, திருவான்மியூா்: 90439 81241, ஆா்.கே.நகா்: 94990 55659, திருவொற்றியூா்: 95668 91187 உள்ளிட்ட எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments