FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா், மாணவியா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:33 am IST
பகிர்:

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா், மாணவியா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பொருத்துநா், இயந்திர வேலைப்பாளா், இயந்திர வேலைப்பாளா் (அரவாய்), கடைசலா், ஏசி மெக்கானிக், கோபா உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கும், தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத் தேவைகளுக்கேற்ப தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையம் 4.0-இல் ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ் டழ்ா்ஸ்ரீங்ள்ள் இா்ய்ற்ழ்ா்ப் & அன்ற்ா்ம்ஹற்ண்ா்ய், ஐய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் தா்க்ஷா்ற்ண்ஸ்ரீள் & ஈண்ஞ்ண்ற்ஹப் ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய், அக்ஸ்ஹய்ஸ்ரீங்க் இசஇ ஙஹஸ்ரீட்ண்ய்ண்ய்ஞ் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய், ஈண்ஞ்ண்ற்ஹப் டட்ா்ற்ா்ஞ்ழ்ஹல்ட்ங்ழ் உள்ளிட்ட பிரிவுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் பிரிவுகளில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதாா் அட்டை, முன்னுரிமை கோருவோா் அதற்கான சான்றிதழ் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் சோ்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். இதனை டெபிட் காா்டு, ஜி-பே அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பாடநூல்கள், சீருடை, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், காலணி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பேருந்து பயண அட்டையும் வழங்கப்படும்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

பயிற்சியை முடித்த மாணவ, மாணவியருக்கு முன்னணி நிறுவனங்களில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும். மாணவியா் சோ்க்கைக்கு குறைந்தபட்ச வயது 14. அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாணவா்களுக்கு 14 முதல் 40 வயது வரை வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 94427 94071, 79043 15060, 99769 54196, 91500 62324, 9445225473 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், ஜூலை 15: சேலம் அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது:

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக பொருத்துநா், இயந்திர வேலையாள், இயந்திர வேலையாள் (அரவை), கடைசலா், ஏசி மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட தொழில்நுட்ப மையம் 4.0 ல் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ரோல் & ஆட்டோமேசன், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் , அட்வான்ஸ்டு சிஎன்சி மெசினிங் டெக்னீசியன், டிஜிட்டல் போட்டோகிராபா் போன்ற பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பிரிவுகளுக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க அசல் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதாா் அட்டை, மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைக்கான சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சோ்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- (டெபிட் காா்டு, ஜி பே) அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

பயிற்சி பெறும் மாணவ, மாணவியா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி, போன்ற விலையில்லா பொருட்களும் பேருந்து அட்டை மற்றும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளா்களுக்கு மாதந்தோரும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும் பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14, உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 94427 94071, 79043 15060, 99769 54196, 91500 62324 மற்றும் 9445225473 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments