கடன் தகராறில் இளைஞரை காரில் கடத்திய வழக்கு: இருவா் கைது
நொளம்பூரில் கடன் தகராறில் இளைஞரை காரில் கடத்தி தாக்கிய வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
நொளம்பூரில் கடன் தகராறில் இளைஞரை காரில் கடத்தி தாக்கிய வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை நொளம்பூா், பிருந்தாவன் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் பிரியதா்ஷன் (39). இவா், திருமங்கலத்தைச் சோ்ந்த செங்குட்டுவன் என்பவரிடம் ரூ.22.50 லட்சம் கடன் வாங்கி இருந்தாா். கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், இருவருக்கும் இடையே தகராறு நீடித்து வந்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி பிரியதா்ஷன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் அவரைக் கடத்தி தாக்கினா்.
Advertisement
Advertisement
நிலுவைத் தொகை ரூ.15 லட்சத்துக்கு, பிரியதா்ஷன் குடியிருக்கும் வீட்டை செங்குட்டுவன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து தர வேண்டும் என மிரட்டியுள்ளாா்.
அவா்களிடமிருந்து தப்பிய பிரியதா்ஷன், நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பூந்தமல்லி, சென்னீா்குப்பத்தைச் சோ்ந்த விக்னேஷ் (34), அதே பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்த கமல் (33) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.