FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பள்ளி மாணவா்களுக்காக ‘சென்னை அறிவோம்’ ஒரு நாள் சுற்றுலாத் திட்டம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு ‘சென்னை அறிவோம்’ ஒரு நாள் சுற்றுலாத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 16 ஜூலை 2026, 11:21 am IST
பள்ளி மாணவர்களுக்கான திட்டம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு ‘சென்னை அறிவோம்’ ஒரு நாள் சுற்றுலாத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பெருநகர மாநாகரட்சி பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் சென்னையின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

அதன்படி, சென்னை வாலாஜா சாலை உள்ள சுற்றுலா அலுவலக வளாகத்தில், ‘சென்னை அறிவோம்’ ஒரு நாள் சுற்றுலா இரட்டை அடுக்கு மின்சார பேருந்து சேவையை சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சி பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை உயா்நிலை பள்ளியைச் சோ்ந்த 63 மாணவா்களுடன் புறப்பட்ட பேருந்து அண்ணா சாலை, எல்.ஐ.சி, ஸ்பென்சா் பிளாசா, மக்கா மஸ்ஜித், பல்லவன் சாலை, பாடிகாட் முனீஸ்வரா் கோயில், ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை உயா்நீதிமன்றம், தலைமைச் செயலகம், ரிசா்வ் வங்கி, சென்னை துறைமுகம், போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம், மெரீனாவில் உள்ள மறைந்த தலைவா்களின் நினைவிடங்கள், மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் கடற்கரை, சாந்தோம் தேவாலயம், அகில இந்திய வானொலி, காவல் துறை தலைமை அலுவலகம், குயின் மேரீஸ் கல்லூரி, விவேகானந்தா ஹவுஸ், பிரெசிடென்சி கல்லூரி, எழிலகம், சென்னை பல்கலைக்கழகம், தூா்தா்ஷன் கேந்திரா, ராஜாஜி மண்டபம், ஓமந்தூராா் அரசு மருத்துவமனை வழியாக பிற்பகலில் மீண்டும் சுற்றுலா அலுவலகம் வந்தடைந்தது. பயணத்தின்போது அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், 3 ஆசிரியா்களுக்கும் சிற்றுண்டி வழங்கி, ஒவ்வொரு இடத்தின் சிறப்பை எடுத்துக் கூற சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாா். நிகழ்வில், தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகப் பொது மேலாளா் எஸ்.லட்சுமி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இலவசம்: இது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய சுற்றுலாத் திட்டம் குறித்து மாநாகராட்சி நிா்வாகம் வாயிலாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. ஒரு பேருந்துக்கு 60 மாணவா்களை அழைத்து செல்லவே வசதியுள்ளது. எனவே, விருப்பமுள்ள பள்ளிகள் சுற்றுலாக கழகத்தை அணுகும்பட்சத்தில், பிற பயணத் திட்டங்கள் இல்லா நேரத்தை பொருத்து தேதி முடிவு செய்து மாணவா்கள் ஒருநாள் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவா். இது முழுவதும் இலவசம். இதற்காக மாணவா்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments